ஜாதியை பற்றி யார் பேசினாலும் அவர்களுக்கு வலுவான உதை கிடைக்கும் - நிதின் கட்கரி! - Seithipunal
Seithipunal


ஜாதியை பற்றி யார் பேசினாலும் அவர்களுக்கு வலுவான உதை கிடைக்கும்​ . காங்கிரஸ் செய்த தவறை நாமும் செய்யக்கூடாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கோவாவின் அருகே உள்ள தாலிகோவில் பாஜக கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மத்தியமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது,

பாரதிய ஜனதா கட்சி வித்தியாசமான கட்சியாக இருந்து வருகிறது. அதனால்தான் மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் பெற்றுள்ளோம். காங்கிரஸ் செய்த தவறுகளுக்காகவே மக்கள் பாஜகவை ஆதரித்துள்ளனர்.

நாம் ஊழலற்ற  நாட்டை உருவாக்க வேண்டும் அதற்காக நாம் ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும். ஜாதி அடிப்படையிலான அரசியலை பின்பற்ற வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் ஜாதி அடிப்படையிலான  அரசியலில் ஈடுபட மாட்டேன்.

ஜாதியை பற்றி யார் பேசினாலும் அவர்களுக்கு வலுவான உதை கிடைக்கும். காங்கிரஸ் செய்த தவறை நாமம் செய்தால் காங்கிரஸ் வெளியேறிவதிலும் நாம் ஆட்சிக்கு வருவதிலும் எந்த பயனும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Whoever talks about caste gets a strong kick by Nitin Gadkari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->