தினம் தினம் மனைவி சித்திரவதை..தாங்க முடியாத கணவன் உயிரைவிட்ட பரிதாபம்!   - Seithipunal
Seithipunal


மனைவியின் தொல்லை தாங்க முடியாததால் கணவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஒரு உருக்கமான கடிதம் எழுதி விட்டு உயிரை மாய்த்திருக்கிறார். 

கர்நாடகா மாநிலம் ஹூப்பள்ளி பகுதியை சேர்ந்த தம்பதி பீட்டர்மற்றும் பிங்கி. இவர்களுக்கு திருமணம் நடந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் திருமணத்தின்போது இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது என கூறப்படுகிறது . இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். மேலும் இது தொடர்பான விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் இந்த விவாகரத்து வழக்கில் பிங்கி ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து  தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு பீட்டர் அலுவலக வேலையில் இருந்து அவரது முதலாளி நீக்கியதால் மிகுந்த மன வேதனையில் இருந்தார். தொடர்ந்து மனைவி பிங்கி மனதளவில் டார்ச்சர் கொடுத்து வந்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பீட்டர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

பீட்டர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஒரு உருக்கமான கடிதம் எழுதி விட்டு உயிரை மாய்த்திருக்கிறார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றிபோது அந்த கடிதத்தில் கூறியிருப்பது :, "அப்பா மன்னிக்கவும்" என் மனைவி பிங்கி என்னைக் கொல்ல பார்க்கிறார் என்றும் தினமும் சித்திரவதை செய்கிறார் என்றும் மனைவி என் மரணத்தை விரும்புகிறாள் என்றும்  என் மனைவியின் சித்திரவதையால் நான் இறந்து கொண்டிருக்கிறேன் என்று பீட்டர் எழுதியிருந்தார்.

இது குறித்து புகாரின் பேரில் அசோக் நகர் போலீசார் பிங்கியிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இதையடுத்து வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கைப்பற்றப்பட்ட பிற ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

காதல் திருமணம் செய்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி டார்ச்சர் செய்ததால் பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife tortured every day. A pity that her husband lost his life


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->