சாரை பாம்புடன் வீடியோ வெளியிட்ட பெண் - நொடியில் தட்டி தூக்கிய போலீசார்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் புலியகுளம் பகுதியில் எட்டு அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினரான அப்துல் ரஹ்மான் மற்றும் சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா உள்ளிட்டோர் நேரில் சென்று பாம்பை பிடித்தனர். 

அப்போது, சாரை பாம்புகள் விஷமற்றவை. அவற்றால் மனிதர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை; பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்று பேசியபடி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ வைரலான நிலையில், வனத்துறை அதிகாரிகள் பாம்பை மீட்ட அப்துல் ரஹ்மான், உமா மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனுமதியின்றி பாம்பை பிடித்து செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு பின்னர் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட வனப்பாதுகாவலரிடம் கேட்டபோது இதுபோன்று மற்றவர்கள் ஈடுபட கூடாது. நல்லெண்ண அடிப்படையில் இருவரும் செயல்பட்டதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman arrested for vedio published with snake in coimbatore


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->