குழந்தைகள் கண்முன்னே தாயை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கள்ளக்காதலன் - போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


குழந்தைகள் கண்முன்னே தாயை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கள்ளக்காதலன் - போலீசார் வலைவீச்சு.!

சென்னையில் உள்ள ஆவடி கொல்லுமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சுந்தர்-சுதா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி சுமார் பத்து ஆண்டுகளாகி உள்ளது. ஆனால், குழந்தை இள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு சட்டப்படி பிரிந்து சென்றனர்.

இதன் பின்னர் சுதா கடந்த 2011-ம் ஆண்டு ஆவடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு இடையே கடந்த 2021-ம் ஆண்டு கருத்து வேறுபாடு எற்பட்டு இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சௌந்தரபாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது தகாத உறவாக மாறியது. இதன் காரணமாக இருவரும் அடிக்கடி ஓட்டலில் அறை எடுத்து தனிமையில் தங்கி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சௌந்தரபாண்டி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சுதாவை வற்புறுத்தியுள்ளார். ஆனால், சுதா மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு சுதா சௌந்தரபாண்டியன் உறவை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சௌந்திரபாண்டி,  சுதா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து விட்டு தப்பித்துச் சென்றார். இதனைப் பார்த்து அதிர்ச்சீ அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத்  தகவல் தெரிவித்தனர். 

அதன் படி போலீசார் விரைந்து வந்து சுதாவை மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சௌந்தரபாண்டியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman injured for man fire on woman with petrol in avadi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->