அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட பெண் காவலர் - கடிதத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
woman police sucide for highr officer harassment in bihar
அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட பெண் காவலர் - கடிதத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வந்தவர் அர்ச்சனா குமாரி. இவருடைய கணவரும் காவலராக பணிபுரிந்து வந்த நிலையில், அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அர்ச்சனா குமாரி தனது அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த சக பணியாளர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் சோதனை செய்தபோது, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில், "அரசு குடியிருப்பில் தங்கிக் கொள்ள துணை காவல் கண்காணிப்பாளர் வாய்மொழியாக உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், குடியிருப்பில் ஏற்கனவே குடியிருந்த மேஜர் நயன்குமார் என்பவர், தனது அறையின் பூட்டை அர்ச்சனா குமாரியின் கணவர் உடைத்ததாக குற்றம்சாட்டி வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஆகவே தங்களை துன்புறுத்திய காவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
woman police sucide for highr officer harassment in bihar