நெருக்கமான புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்ட காதலன் - வேதனையில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


நெருக்கமான புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்ட காதலன் - வேதனையில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.!

கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டம், கொத்தநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் வித்யாதர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்தார். இந்தக் காதல் இருவரிடையேயும் மிகவும் நெருக்கமானதால், இருவரும் எல்லை மீறியுள்ளனர்.

அதனை வித்யாதர் தனது செல்போனில் புகைப்படங்களாக எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில், அந்த இளம்பெண் அருண் வித்யாதரின் நடவடிக்கை பிடிக்காமல், அவரைத் தவிர்த்துள்ளார்.

இதையடுத்து வித்யாதர் அந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் சம்பவம் தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதையறிந்த வித்யாதர், அந்த பெண்ணின் புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டார். மேலும், அந்த பெண்ணின் சகோதரியின் கணவரின் புகைப்படங்களையும் பதிவிட்டு, தான் கைது செய்யப்பட்டால் அதற்கு அவர் தான் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்து கதறி அழுத இளம்பெண்ணின் பெற்றோர்கள் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில், தங்கள் மகள் தற்கொலைக்கு அருண் வித்யாதர் தான் காரணம் என்று புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார்  அருண் வித்யாதர் மீது வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sucide for boy friend published obscene photos in social media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->