குழந்தைக்கு பால் கொடுக்க மறுத்த கணவன் - ஆத்திரத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.!
woman sucide in karnataga for clash
கர்நாடகா மாநிலத்தில் உள்ள, பெங்களூரு கார்வேபாவிபல்யா லட்சுமி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் - ஷாலினி தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தக் குழந்தை கடந்த 14-ம் தேதி நள்ளிரவு அழுது கொண்டே இருந்ததால், ஷாலினி சமாதானப்படுத்தி பாட்டில் பால் கொடுத்துள்ளார்.
இருப்பினும், குழந்தை சத்தமாக அழுததால் ஷாலினியின் மாமியார் குழந்தையை தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பால் தரவேண்டும் என்று ஷாலினி குழந்தையைத் தர மறுத்ததனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, அங்கு வந்த ஷாலினியின் கணவர் சுரேஷ், குழந்தையைத் தூக்கிச் சென்றார். இதனால், ஆத்திரமடைந்த ஷாலினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த குடும்பத்தினர் உடனடியாக ஷாலினியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ஷாலினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
woman sucide in karnataga for clash