மகளுடன் தற்கொலை செய்த இளம்பெண் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


மகளுடன் தற்கொலை செய்த இளம்பெண் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் சூரேகெரே கிராமத்தை சேர்ந்தவர்கள் மஞ்சுநாத்-கவிதா தம்பதியினர். இவர்களுடைய மகள் நிகாரிகா. இந்தத் தம்பதியினருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்தின்போது, கவிதாவின் பெற்றோர் மஞ்சுநாத்துக்கு நகை-பணம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இருப்பினும், அவர்களுக்குள் வரதட்சணையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கொடுமையும் படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். 

அதன்படி நேற்று முன்தினம் கவிதா தனது மகள் நிகாரிகாவை அழைத்து கொண்டு அங்குள்ள பெரிய ஏரிக்கு சென்று துப்பட்டாவால் மகள் நிகாரிகாவை தனது உடலுடன் சேர்த்து கட்டிக் கொண்டு ஏரிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து நீச்சல் வீரர்கள் உதவியுடன் கவிதா மற்றும் அவரது மகள் நிகாரிகாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், வரதட்சணை கொடுமையால் கவிதா தனது மகள் நிகாரிகாவுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாவின் கணவர் மஞ்சுநாத்தை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sucide with daughter in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->