அனைத்து அமைப்புகளிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் - குடியரசு தலைவர் முர்மு.! - Seithipunal
Seithipunal


அருணாச்சல பிரதேச மாநிலத்தின் 37-வது மாநில தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவர் முர்மு இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் அங்கு சென்றார்.

இந்நிலையில், நேற்று அவர் மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- "இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் ஒரு காலத்தில் சாலை, ரெயில் மற்றும் விமான போக்குவரத்து உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல், பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தன. 

அதனால் மத்திய அரசு, வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த வகையில், அருணாசலபிரதேசம் மீது வளர்ச்சி என்னும் சூரியன் சுடர் விட்டு ஒளிக்கிறது. 

வட மாநிலங்களிலேயே சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அருணாசலபிரதேசம் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும் இந்த மாநிலம் முதலீடுகளை ஈர்க்க ஏற்ற மாநிலம் ஆகும். அதன் காரணமாக மாநிலத்தின் கலாசாரங்களையும், பாரம்பரியத்தையும் சட்டசபை உறுப்பினர்கள் பாதுகாக்க வேண்டும். 

தற்போதைய உலகில், சுற்றுச்சூழல் மாசு மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை முக்கியமான பிரச்சினைகளாக உள்ளது. முதலில் இந்த பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும். இதற்காக ஆட்சியர்கள் ஒரு பிரகடனம் மூலம் தங்களது உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளனர். இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். 

நாட்டில் வளர்ச்சிக்கு ஒவ்வொரு துறையிலும் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். அவர்களின் பங்களிப்பு அருணாசலபிரதேசம் உள்பட அனைத்து சட்டசபைகளிலும் அதிகரிக்க வேண்டும். இதேபோன்று, மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறும் அனைத்து அமைப்புகளிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

womans participate count increase to all organization president murmu speach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->