இந்த 2 நாட்களுக்கு.. பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வர வேண்டாம்.!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையொட்டி 2 நாட்களுக்கு பெண்கள் குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கேரளா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள செய்தி குறிப்பில் ''பொங்கல் பண்டிகைக்கு அதிக விடுமுறை தினங்கள் விடப்பட்டுள்ளதாலும், அடுத்த 10 நாட்களில் மகரவிளக்கு பூஜை முடிவடைய உள்ளதாலும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன

தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு வசதி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 14ஆம் தேதி 50 ஆயிரம் பேருக்கும், 15ஆம் தேதி 40 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்திற்காக இணைய வழியில் முன்பதிவு செய்ய முடியும். கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இந்த இரு நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். விடுமுறை முடிந்த பிறகு வரும் 16ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை அதிகளவு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women children should avoid coming to sabarimala on jan14 and 15


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->