உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை இன்று திறப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 125 அடி உயரத்தில் 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.

இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், உலகிலேயே மிகப்பெரிய அம்பேத்கர் சிலை என்று அழைக்கப்படும் இந்த சிலையை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world biggest ambethkar statue open today in andira


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->