ராஜஸ்தானில் எழுந்துள்ள உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை.. இன்று திறப்பு.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ்சமந்த் மாவட்டம் நத்வாரா நகரில்  ஒரு குன்றின் மீது இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தியானநிலை தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை "தத் பதம் சன்ஸ்தான்" என்ற அமைப்பு அமைத்திருக்கிறது. பக்தர்கள் இந்த சிலையை 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் கூட பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தச் சிலையை பொதுமக்கள் இரவிலும் பார்க்கும் வகையில் வண்ண ஒளி விளக்குகளும் பொறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சிலைக்குள் 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பக்தர்கள் உள்ளே சென்று பார்க்கலாம். அதில் ஒரு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக மொத்தம் 3 ஆயிரம் டன் உருக்கு, இரும்பு, கான்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றை பயன்படுத்தி, சுமார் 10 ஆண்டுகளாக இந்த சிலை கட்டப்பட்டிருக்கிறது. 

மேலும், இந்த சிலை சுமார் 250 ஆண்டுகள் நீடிக்கும். அதுமட்டுமின்றி 250 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் வகையிலும், சுமார் 360 அடி உயரத்திலும்   அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைப்பு பணியை கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தொடங்கிவைத்தார். 

இன்று இந்த சிவன் சிலை முதலமைச்சர் முன்னிலையில் திறந்துவைக்கப்படுகிறது. மேலும், சட்டசபை சபாநாயகர் சி.பி.ஜோஷி உள்ளிட்டோறும் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர். இந்த சிலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும், சுற்றுலா பயணிகள் பொழுதை கழிக்கும் வகையில் சாகச சுற்றுலா வசதிகள் உள்ளிட்டவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world highest sivan statue in rajasthan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->