எடியூரப்பா, ஸ்ரீராமுலு மீது வழக்கு பதிவு செய்ய முடிவு! கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில் பெரியளவில் ஊழல்!
Yeddyurappa decided to file a case against Sriramulu Massive corruption in the purchase of corona protective equipment
கர்நாடகாவில் 2020-21 காலகட்டத்தில் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகும் புகார்கள் எழுந்துள்ளன. அப்போதைய முதல்வர் எடியூரப்பா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக, அப்போதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
2023-ல், சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, இந்த புகார்களை ஆராய ஓய்வுபெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சுகாதாரத்துறை அதிகாரிகளை தாண்டி பல்வேறு தரப்பினரிடம் விசாரித்து, தனது முதல்கட்ட அறிக்கையை 2023 ஆகஸ்ட் 31-ஆம் தேதி அரசுக்கு சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாகவும், இதனால் மாநில அரசுக்கு ₹14 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு உள்ளிட்டோரின் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் இதனை உறுதி செய்து, சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், நீதிபதி குன்ஹா தனது விரிவான இறுதி அறிக்கையை இன்னும் ஆறு மாதங்களில் தாக்கல் செய்வார் எனவும் அறிவித்துள்ளார்.
English Summary
Yeddyurappa decided to file a case against Sriramulu Massive corruption in the purchase of corona protective equipment