வருணா தொகுதியில் என் மகன் போட்டியிட மாட்டார் - எடியூரப்பா பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


224 தொகுதி கொண்ட கர்நாடக மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜக ஆட்சியைத் தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும், காங்கிரஸ் உள்ளிட்ட சில காட்சிகள் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, “வருணா தொகுதியில் விஜயேந்திரரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் அவர் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நீண்ட காலத்திற்கு முன்பே நான் தெரிவித்துள்ளேன். 

விஜயேந்திரர் எக்காரணம் கொண்டும் வருணாவில் போட்டியிடும் பேச்சுக்கே இடமில்லை. அவர் "எனது தொகுதியில்" தான் போட்டியிடுவார், எனவே அவரை வருணாவில் போட்டியிடச் சொல்வதில் எந்த கேள்வியும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

அப்போது, பாஜக கட்சிக்கு சொந்த பலம் இருப்பதாகவும், கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் விஜயேந்திரர் கூறியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடியூரப்பா, 

“அவருடைய கூற்று சரியானது. அவர் நிச்சயம் ஷிகாரிபுராவில் போட்டியிடுவார் என்று நான் கூறுகிறேன். இதனை கட்சி மேலிடத்திடமும், விஜயேந்திரரிடமும் தெரிவிப்பேன் என்றுத் தெரிவித்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yeduyurappa says son not contesting from varuna in karnataga election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->