மனைவியின் விருப்பத்துடன் நடந்த அபூர்வமான திருமணம்..! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர் என்பவர் திருமணமாகி 2 வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கை அறிமுகமானார். பின்பு நாளடைவில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. தனது காதலை பஹிர் ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் அவரது காதலை அவரின்  மனைவி கண்டுபிடித்தார். 

இது குறித்து தனது கணவருடன் பேசிய மனைவி, அவர்களின் காதலை அங்கீகரித்ததோடு மட்டுமல்லாமல்,  இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதித்தார். பஹிர் மனைவி இருவரையும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டதால் இருவரும் உடனே ஒத்துக்கொண்டனர். இருவரும் திருநங்கைகள் புடைசூழ கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

இத்திருமணத்தை முன்னின்று நடத்திய காமினி இது குறித்து தெரிவிக்கையில்:- இருவரின் விருப்பத்தின் பேரில் மனைவியின் ஒப்புதலுடன் இத்திருமணம் நடந்துள்ளதால் இது அபூர்வமான திருமணமாகும். இத்திருமணம் குறித்து மறுபரிசீலனை செய்து கொள்ளும்படி திருநங்கை சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டனர். இருவரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்து வைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man married transgender


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->