ரயில் முன்பாய்ந்து பெண்ணை காப்பாற்றிய இளைஞர்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட பெண்ணை, இளைஞர் ஒருவர் ரயில்  முன் பாய்ந்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே பர்கேடியில் ரயில்வே தண்டவாள ஓரத்தில் இளம்பெண் ஒருவர் முதுகில் பையை சுமந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. ரயிலை பார்த்ததும் அச்சமடைந்த அப்பெண் நிலைதடுமாறி தண்டவாளத்தில் தவறி விழுந்தார்.

அவரால் எழுந்து ஓட முடியவில்லை. அப்போது அங்கு இருந்த முகமது மெகபூப் என்ற நபர் வேகமாக குதித்து தண்டவாளங்களுக்கு நடுவே இழுத்து படுக்க போட்டு அவரது தலைக்கு நேராக தானும் தலை வைத்து படுத்துக் கொண்டு உள்ளார். மேலும் அந்தப் பெண்ணின் தலையைத் தூக்க விடாமல் பார்த்துக் கொண்டுள்ளார்.

ரயில் முழுவதுமாக கடந்து சென்ற பிறகு இருவரும் எழுந்து தண்டவாளத்தை கடந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் தன்னுயிரையும் பற்றி கவலைப்படாமல் இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man saved women in train track


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->