டெல்லி ஐஐடியில் பரபரப்பு - மாணவிகள் உடைமாற்றுவதை ரகசிய படம் பிடித்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


டெல்லி ஐஐடியில் பரபரப்பு - மாணவிகள் உடைமாற்றுவதை ரகசிய படம் பிடித்த கொடூரம்.!

நாட்டின் தலைநகரான டெல்லி ஐஐடியில் சமீபத்தில் மாணவர்களின் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடந்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லி பாரதி கல்லூரி மாணவிகள் வந்துள்ளனர்.

அங்கு அவர்கள் கழிவறையில் உடை மாற்றும் போது, ரகசியமாக படம் எடுக்கப்பட்டதாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் குற்றம் சாட்டினார்கள். மேலும், பாரதி கல்லூரியின் எலான்ட்ரே சொசைட்டியைச் சேர்ந்த பெண்கள், சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது புகார் அளித்த பிறகும் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக கிஷன்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

அந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்ட இருபது வயதுடைய ஒப்பந்த துப்புரவு தொழிலாளி கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for students dress change vedio capture in delhi iit


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->