தலைக்கேறிய போதை.. நடுரோட்டில் நண்பனை குத்தி கொலை செய்த வாலிபர்.!
Youth killed his friend in the middle of the road in Karnataka
கர்நாடக மாநிலத்தில் குடிபோதையில் நடுரோட்டில் வைத்து நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டத்தை சேர்ந்தவர் பசவராஜ் (23) கடந்த பல ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் புட்டேனஹள்ளி பகுதியில் வசித்து வந்தார். இவரது நண்பர் அபிஜித். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பசவராஜிம், அபிஜித்தும் வெளியே சென்றனர்.
பின்பு இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு மதுபான விடுதிக்குச் சென்று மது அருந்தினர். இதையடுத்து இருவரும் குடிபோதையில் இருந்த நிலையில், மதுபான விடுதியில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு பேரும் சித்தலிங்கேஸ்வரா தியேட்டர் முன்பாக வந்து கொண்டிருந்தபோது, மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிஜித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நண்பன் பசவராஜை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பலத்த காயமடைந்த பசவராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே பசவராஜ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் பசவராஜை அபிஜித் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் நண்பனை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிய அபுஜித்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Youth killed his friend in the middle of the road in Karnataka