அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் ஆள் சேர்க்கும், அக்னிபத் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகார் இராணுவ வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள பல்வேறு இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் பல்வேறு பகுதிகளில் வன்முறையாக மாறி உள்ளது.

 

இதனிடையே, தெற்கு ரயில்வே மண்டலத்திலிருந்து பீகார், கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிகளுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் அக்னிபாத் போராட்டங்களால் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து செகந்திராபாத் செல்லும் சபரி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராணுவத்தில் சேர தன்னை தயார் படுத்திக் கொண்டு வந்த இளைஞரின் திடீர் முடிவால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் பாலசூர் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth suicide for agnipath


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->