சுவையான 'கட்லா மீன் குழம்பு' ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!
catla fish gravy recipe in tamil
சுவையான கட்லா மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கட்லா மீன்
புளி
சின்ன வெங்காயம்
பூண்டு
தக்காளி
மிளகாய் தூள்
கடுகு, உளுத்தம் பருப்பு
வெந்தயம்
கருவேப்பிலை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் கட்லா மீனில் உப்பு சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் புளி கரைச்சலை ஊற்றி தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து 15 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும்.
இறுதியாக மீனை சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கட்லா மீன் குழம்பு தயார்.
English Summary
catla fish gravy recipe in tamil