'அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு'.. இது 'முல்தானி மிட்டி'க்கும் பொருந்தும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை..!! - Seithipunal
Seithipunal


இன்றைய காலக் கட்டத்தில் முகத்தை அழகாகவும், பொலிவாகவும் பராமரிக்க பல்வேறு விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களையும், ரசாயனம் கலந்த க்ரீம்களையும் பெண்கள் உபயோகிக்கிறார்கள். ஆனால் இதனால் பல்வேறு பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. 

ஆனால் இந்த விலை உயர்ந்த ரசாயனங்களுக்கு பதிலாக வீட்டில் எளிமையான, இயற்கையான முறையில் முகப் பராமரிப்பு செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது முல்தானி மிட்டி. மிக குறைந்த விலையில் அனைவரும் எளிதாக வாங்கக் கூடியதாக இது இருப்பதால் சிலர் இதை தினமும் கூட உபயோகிப்பார்கள். ஆனால் அதையும் அளவாகத் தான் உபயோகப்படுத்த வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பலருக்கும் இருப்பதில்லை. 

முதலில் முல்தானி மிட்டியை உங்கள் சருமத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் இது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே முதலில் இதை பேட்ச் டெஸ்ட் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த முல்தானி மிட்டியை உபயோகப் படுத்திய உடன் நீங்கள் வெயிலில் செல்லக் கூடாது. நேரடியாக சூரிய ஒளி  சருமத்தில் படாமல் கவனமாக இருக்க வேண்டும். 

குறிப்பாக முல்தானி மிட்டியை மட்டும் தனியாக உபயோகப் படுத்தாமல், ரோஸ் வாட்டர் அல்லது தயிர் கலந்து உபயோகப் படுத்துவது தான் நல்லது. மேலும் இதை தினமும் உபயோகித்தால் விரைவில் சருமம் வறட்சியடையும். வாரத்திற்கு 1 அல்லது 2 முறை மட்டுமே முல்தானி மிட்டி உபயோகிக்க பரிந்துரைக்கப் படுகிறது. அதிலும் சென்சிடிவ் ஸ்கின் என்றால் இதை தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு முல்தானி மிட்டி மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cautions Of Multani Mitti


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->