சளி தொல்லையை நீக்கும் கரசாரமான நண்டு மசாலா...!
Crab masala Recipe
நண்டில் வைட்டமின் A அதிகம் உள்ளது. நண்டு சாப்பிடுவதால் கண்பார்வை அதிகரிக்கும். சளி தொல்லை இருப்பவர்களுடம் நண்டு நல்ல பலன் தரும். தற்போது சுவையான நண்டு மசாலா எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
எண்ணெய் - 1 குழி கரண்டி
இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
காய்ங்த மிளகாய் - 4
மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லி - 2 ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 4
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - மல்லி - சிறிதளவுநண்டு - 1 கிலோ
செய்முறை:
முதலில் கழுவிய நண்டை தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் தண்ணீர் வந்ததும் இறக்கி வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அது சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து கிளறி வைக்கவும்.
மிளகு, மல்லி, சீரகம், சோம்பு லேசாக ஆகியவற்றை வறுத்து அதனுடன் தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மல்லி இலை அரைத்து கொள்ளவும்.
கடாயில் கிரேவி பதத்திற்கு அதனுடன் நண்டு சேர்க்கவும். 10 நிமிடம் கழித்து அரைத்த மசாலாவை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.