எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் சிக்கிய கோடிக்கணக்கான பணம்! ரூ.750 கோடி வரி ஏய்ப்பு - அதிரடி ஐடி ரெய்டு! - Seithipunal
Seithipunal


சென்னை, கோவை, ஈரோடு, பெங்களூரு ஆகிய 25க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 7 ஆம் தேதி முதல் நேற்றுவரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்தின் ஈரோட்டில் உள்ள என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது.  

சென்னையில் மட்டும் ஆறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பூந்தமல்லி அருகே சாத்தங்காடு பகுதியில் உள்ள ஜே.டி. மெட்டல் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  

மேலும், சென்னையில் தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் மெட்டல் நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், ராமலிங்கம் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் 26 இடங்களில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை 5 நாட்களுக்கு பின் நேற்றிரவு நிறைவு பெற்ற நிலையில், சோதனையில் 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode ADMK Edappadi Palanisamy Ramalingam IT Raid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->