கர்ப்பிணி பெண்களுக்கு நார்சத்து வழங்கும் சாமை அரிசி வெண்பொங்கல் செய்வது எப்படி?..!
Fiber Strength for Pregnant Women should eat Samai Rice Venpongal Health Tips
கர்ப்பமாக இருக்கும் பெண்கள், கர்ப்பகாலத்தில் தங்களின் உடல் நலத்தையும், வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு சத்தான ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இயல்பாகவே கற்பகாலத்தில் பெண்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
இது போன்ற தருணங்களில் உடலுக்கு நன்மை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் உனவுகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அந்த வகையில், கர்ப்பிணி பெண்களுக்கு தேவைப்படும் நார்சத்து நிறைந்துள்ள சாமை அரிசி வெண்பொங்கல் செய்வது எப்படி என காணலாம்.
சாமை அரிசி வெண்பொங்கல் செய்யத்தேவையான பொருட்கள் :
சாமை அரிசி - 100 கிராம்,
பாசிப்பருப்பு - 50 கிராம்,
சீரகம் - 2 கரண்டி,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 50 மில்லி,
பெருங்காயத்தூள் - ஒரு கரண்டி,
மிளகுத்தூள் - தேவையான அளவு அல்லது மிளகு 8-10 வரை,
உப்பு - தேவையான அளவு,
இஞ்சி - ஒரு துண்டு,
தண்ணீர் - 450 மில்லி,
முந்திரி - 3.
சாமை அரிசி வெண்பொங்கல் செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட சாமை அரிசி, பாசிப்பருப்பு போன்றவற்றை நீர்விட்டு நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும். பின்னர் சாமை அரிசியுடன் பாசிப்பருப்பு, தண்ணீர், உப்பு ஆகியவை சேர்த்து குழைய வடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வானெலியில் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் சீரகம், கருவேப்பில்லை, இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், முந்திரி ஆகியவற்றை ஒன்றன் பின்னர் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
எண்ணெயில் இட்ட பொருட்கள் அனைத்தும் நன்கு வதங்கியதும், குழைய வடித்த சாதத்தில் சேர்த்து நன்றாக கிளறி இருக்கவும். இந்த சாதத்தை பெண்கள் சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு நார்சத்து கிடைக்கும். இதனை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தவிர்க்கப்படும். உடலுக்கு தீமை விளைவிக்கும் கிருமிகள் அழிக்கப்படும். மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.
குறிப்பு: கர்ப்பிணி பெண்கள் நார்சத்து வழங்கும் எந்த வகையான உணவுகள் மற்றும் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடும் முன்னர் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும். நார்சத்து வழங்கும் உணவுகளை சாப்பிடும் நபர்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Fiber Strength for Pregnant Women should eat Samai Rice Venpongal Health Tips