வீட்டிலேயே தலைமுடி பிரச்சனையை எப்படி சரிசெய்வது? - Seithipunal
Seithipunal


            கூந்தல் அடர்த்தியாகவும் கருப்பாகவும் இருக்க வேண்டும் என பலரும்  விரும்புவோம். அதற்கு கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை  பயன்படுத்துவோம். அவற்றை தவிர்த்து வீட்டிலேயே இயற்கையான முறையில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தி வர கூந்தல் பலம் பெறும் அதனை எப்படி செய்வது என பார்போம்.

தேவையான பொருட்கள்:

செம்பருத்திப் பூக்கள் - 20

வேம்பு இலை - ஒரு கொத்து

கருவேப்பிலை - ஒரு கொத்து

சின்ன வெங்காயம் - ஐந்து

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

கற்றாழை இலைக்கீற்று - 1

மல்லிகைப்பூ - 15 முதல் 20

தேங்காய் எண்ணெய் - ஒரு லிட்டர்

செய்முறை:

வெந்தயத்தை நீரில் அரை மணிநரம் ஊற வைக்கவும் கற்றாழையை சிறு சிறு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும் எண்ணெய் தவிர்த்து, மேலே கூறப்பட்டுள்ள எல்லாப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்

அனைத்து பொருட்களையும் அரைத்த கலவையை தூய தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்றாகக் கலந்து, குறைந்த தீயில் 45 நிமிடங்கள் வரை சூடு செய்யவும். எண்ணெயின் நிறம் பச்சை நிறத்தில் வரும் வரை சூடு செய்தால் போதுமானது. கொதிக்க வைத்த எண்ணெயை நன்றாக ஆறவைத்து, வடிகட்டி ஈரமில்லாத பாட்டிலில் வைத்து பயன்படுத்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Home made hairoil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->