பார்லர் போகாமல் வீட்டிலேயே சரும அழகை பராமரிக்க வேண்டுமா? வீட்டிலேயே தயார் செய்யும் ஈசி பேஸ்பேக்குகள்..!
Homemade Facepacks
பொதுவாக பேஸ்பேக்குகள் சருமத்தை பொலிவாக்கவும்ன் சருமத்தின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும். சரும பராமரிப்பில் பேஸ்பேக்குகள் முக்கிய இடம்பெறுகின்றன. தற்போது வீட்டிலேயே சில பேஸ்பேக்குகள் எப்படி தயார் செய்து பயன்படுத்துவது என பார்போம்.
முட்டை பேஸ்பேக்:
முட்டையில் வெள்ளை கருவுடன் அரை தேக்கரண்டி தேன் ஒரு ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் பொலிவாகும்.
முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஒரு டீஸ்பூன் தயிருடன், அரை தேக்கரண்டி தேன் மற்றும் முல்தானி மிட்டி சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி வர எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
பப்பாளி:
நன்றாக கனிந்த பப்பாளி பழத்தின் சதை பகுதியை கூழாக்கி முகத்தில் தடவி வர சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி பொலிவு பெறும்.
ஆரஞ்சு :
ஆரஞ்சு தோல் பவுடருடன் தயிர் மற்றும் கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர சருமம் அழகாகும். இந்த பேஸ்பேக்கை வாரமிருமுறை பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர சருமம் பிரகாசமடையும்.