பத்தே நிமிடத்தில் பக்காவான பீன்ஸ் பொரியல்.! - Seithipunal
Seithipunal


பத்தே நிமிடத்தில் பக்காவான பீன்ஸ் பொரியல்.!

காய்கறி வகைகளுள் ஒன்று பீன்ஸ். இந்த பீன்ஸ்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட இந்த பீன்ஸை வைத்து ருசியான பொரியல் செய்வது எப்படி? என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

பீன்ஸ்

எண்ணெய்

சீரகம்

கடுகு உளுந்து

கடலைபருப்பு

மிளகாய் வத்தல்

வெங்காயம்

மஞ்சள் தூள்

உப்பு

கறிவேப்பிலை

தேங்காய் துருவல்

செய்முறை :-

முதலில் பீன்ஸை நன்றாக கழுவி நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 100 கிராம் சின்ன வெங்காயத்தையும் நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில், கடலை பருப்பு, சீரகம், கடுகு, உளுந்து உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து பொரிய விட வேண்டும். 

அதில், இரண்டு மிளகாய் வத்தலை சேர்க்க வேண்டும். இவை பொரிந்தவுடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும். அதில், பீன்ஸ் மற்றும் மஞ்சள் துள் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். 

பீன்ஸ் வெந்த பிறகு தேவையான அளவு உப்பு, விருப்பத்திற்கு ஏற்ப தேங்காய் துருவல் உள்ளிட்டவற்றைச் சேர்த்து இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பீன்ஸ் பொரியல் தயார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make beens poriyal


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->