ராஜஸ்தான் துணை முதல்வரின் மகன் போக்குவரத்து விதி மீறல்: 7,000 ரூபாய் அபராதம்! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவாவின் மகன் ஆஷூ பைர்வா, தனது நண்பர்களுடன் திறந்தவெளி ஜீப்பில் போக்குவரத்து விதிகளை மீறி பயணம் செய்த வீடியோ வைரலானது.

இந்த வீடியோவில், ஜீப்பின் பின்னால் காவல்துறை பாதுகாப்பு வாகனமும் இணைந்து சென்றது, இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

துணை முதல்வரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டனர், அதில் அவர்கள் சாலையில் விதிகளை மீறி பயணம் செய்ததாக காணப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பேசிய பிரேம்சந்த் பைரவா, "என் மகன் பள்ளியில் உயர் கல்வி பயின்று வருகிறார். அவர் இன்னும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர். அவருக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் வாகனம் பின்னால் சென்றது," என்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ஆஷூ பைர்வாவுக்கு போலீசார் ரூ.7,000 அபராதம் விதித்துள்ளனர். ஜீப்பில் விதிமீறலாக பெரிய டயர்களை பொருத்தியதற்காக ரூ.5,000, சீட் பெல்ட் அணியாததற்காக ரூ.100, செல்போனில் பேசியபடியே பயணம் செய்ததற்காக ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan deputy chief minister son violates traffic rules Rs 7000 fine


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->