புதிய சுவையில் கீரை சாம்பார் - வாங்க பார்க்கலாம்.!
how to make keerai sambar
புதிய சுவையில் கீரை சாம்பார் - வாங்க பார்க்கலாம்.!
கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்தக் கீரைகளில் மணத்தக்காளி, முருங்கை, வல்லாரை, பசலை என்று நிறைய வகைகள் உள்ளது. இந்தக் கீரைகளை வைத்து பொரியல், கூட்டு, சாம்பார் என்று நிறைய செய்யலாம். அதில் சாம்பார் செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
பருப்பு, விளக்கெண்ணெய், பெருங்காயம், மஞ்சள் தூள், சாம்பார் பொடி, எண்ணெய், கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, கீரை, புளி, வெங்காயம், தக்காளி, உப்பு
செய்முறை:-
முதலில் பருப்பை விளக்கெண்ணெய், மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து வேகவைத்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியை சுடு தண்ணீரில் சேர்த்து நன்றாக கரைத்து வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கீரையை நன்றாக அலசி, ஆய்ந்து சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் சேர்த்து பொரியவிட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதனுடன் பருப்பு, உப்பு, சாம்பார் பொடி, புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பின்னர் அலசி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்றாக கொதி வந்தவுடன் இறக்கவேண்டும். அவ்வளவுதான் சுவையான கீரை சாம்பார் தயார்.
English Summary
how to make keerai sambar