முதலமைச்சருக்கு எதிராக, உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி சட்ட நடவடிக்கை எடுப்பேன்; அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை..!
AIADMK MP Thambidurai notice against the Chief Minister
டங்ஸ்டன் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பார்லியில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க இருப்பதாக அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை கூறி உள்ளார்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தி.மு.க.,மற்றும் அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பார்லியில் கனிமவள மசோதாவுக்கு அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை ஆதரித்து பேசியதாக தி.மு.க.,கூறி வருகின்றது. இந்த குற்றச்சாட்டை அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் அவை உறுப்பினர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலினும் முன் வைத்திருந்தார். அதற்கு அ.தி.மு.க., தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை இதுகுறித்து, நிருபர்களிடம் கூறியதாவது;
டங்ஸ்டன் சுரங்க விவகாரம் வர நான் தான் காரணம் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை முழுமையாக மறுக்கிறேன். தமிழக சட்டசபையில் உறுப்பினர் அல்லாத என்னை பற்றி பொய்யான குற்றச்சாட்டை முதல்வர் கூறி உள்ளார்.எனவே, அவர் மீது பார்லியில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
English Summary
AIADMK MP Thambidurai notice against the Chief Minister