புதிய சுவையில் வெண்டைக்காய் துவையல்..!
how to make ladis finger thuvaiyal
காய்கறி வகைகளில் ஒன்றான வெண்டைக்காய் நினைவாற்றலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த வெண்டைக்காயில் சாம்பார், காரக்குழம்பு, பொரியல் என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், முதல் முறையாக வெண்டைக்காயில் துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்
கடலை பருப்பு
உளுந்தம் பருப்பு
வர மிளகாய்
பெரிய வெங்காயம்
பூண்டு
புளி
கடுகு
பூண்டு
கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய்
செய்முறை:-
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும் வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். ஓரளவிற்கு வெந்தவுடன் அதனை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இவை அனைத்தையும் ஒரு தட்டில் போட்டு ஆற வைத்து மிக்சி ஜாரில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்தால் சுவையான வெண்டைக்காய் துவையல் ரெடி.
English Summary
how to make ladis finger thuvaiyal