சூப்பரான மொறு மொறு நெத்திலி கருவாடு வறுவல்..! செய்வது எப்படின்னு தெரியுமா.?
How to make Nethili karuvadu fry
சுவையான மொறு மொறு நெத்திலி கருவாடு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு - 200 கிராம்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் நெத்திலி கருவாடை வெந்நீரில் 5 நிமிடம் ஊற வைத்து தலையை நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு கருவாட்டில் மிளகாய் தூள், கறிவேப்பிலை, மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பின்பு அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டி வைத்த கருவாட்டை போட்டு வறுத்து எடுத்தால் சுவையான மொறு மொறு நெத்திலி கருவாடு வறுவல் ரெடி.
English Summary
How to make Nethili karuvadu fry