குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டேஸ்டியான சாக்லேட் பாப்கார்ன்.! செய்வது எப்படி.?
How to make Tasty chocolate popcorn
வீட்டிலேயே எளிமையான முறையில் டேஸ்டியான சாக்லேட் பாப்கார்ன் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
பாப்கார்ன் சோளம் - 1 கப்
குக்கீஸ் சாக்லேட் - 50 கிராம்
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை பொடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது சாக்லேட் உள்ள பாத்திரத்தை அதன் மேல் வைத்து சாக்லேட்டை ஆவியில் உருக வைக்கவும்.
பின்பு உருக ஆரம்பித்ததும் இறக்கி, நெய் சேர்ந்து கட்டியில்லாமல் கிளறவும். பின்பு குக்கரில் எண்ணெய் விட்டு, பாப் கார்னைப் போட்டு, உப்பு சேர்த்து மூடியால் மூடி விடவும்.
பிறகு பொரிந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டவும். பிறகு, தயாரித்த சாக்லேட் சிரப்பை வடிகட்டி மூலம் பாப்கார்ன் மேல் விடவும். பிறகு சாக்லேட் சிறப்புடன் பாப்கார்னை நன்கு கலந்தால் சூப்பரான சாக்லேட் பாப்கார்ன் ரெடி.
English Summary
How to make Tasty chocolate popcorn