உடல் எடை குறைய மிக எளிமையான வழி.! முருங்கை சூப் பொடி.! - Seithipunal
Seithipunal


எது ஒன்றும் எளிமையாக கிடைத்துவிட்டால் அதை நம் வாழ்வில் தினமும் பின்பற்றுவதில் சிரமம் இருக்காது. இன்று நம்மில் பலர் சந்திக்கும் சிக்கல்கள் அதிகப்படியான உடல் எடை, உடல் சோர்வு, மலச்சிக்கல் போன்ற உபாதைகள்தான்.

இதற்கான தீர்வை தேடியும் அலைகிறோம். இதை இன்றைய சந்தை பயன்படுத்தி கொள்கிறது. அதில் முக்கியமாக நாம் முயற்சிப்பது டையட்.

முழுமையாக டயட்டை பற்றி அறியாமலும், இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமலும் பலர் பேர் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

உடல் எடை நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதற்காக முழுதாக தெரியாத ஒரு விஷயத்தை செய்து பின்விளைவுகள் அனுபவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த எல்லா சிக்கல்களுக்கும் நமது மரபு வழியில் ஒரு எளிய தீர்வு இருக்கிறது. 'சூப்" அருந்துவது தான் அந்த வழி.

பிரெஞ்சு நாட்டில் தான் முதன்முதலில் சூப் தயாரித்து உண்ணும் வழக்கம் தோன்றியது. காலப்போக்கில் அது உலகம் முழுவதும் மக்கள் அறிந்த ஒரு உண்ணும் முறையாகி போனது. தினசரி இருவேளை நமக்கு பிடித்த சூப் ஒன்றை எடுத்துக்கொள்வது நமது அனைத்து உடல் சிக்கல்களுக்கும் தீர்வைத்தரும். குறிப்பாக உடல் எடை குறைய சிறந்த வழி இதுதான். இருந்தாலும் நமது உடலுக்கு என்ன சத்து வேண்டும்? என்ன சூப் அருந்த வேண்டும்? என்பதும் ஒரு கேள்விதான்.

தினமும் ஒரு வகை சூப் தயாரிக்க நமக்கு நேரத்தை இந்த வாழ்க்கை முறை தரவில்லையே என்று யோசிப்பதும் சரிதான். எல்லா சிக்கல்களுக்கும் இவ்வுலகில் தீர்வுண்டு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இதற்கும் ஒரு விடை இருக்கிறது. 'முருங்கை இலை சூப்" உடல் எடை குறைவதற்கு மட்டுமல்லாமல் உடலில் என்ன உபாதைகள் இருந்தாலும் அதை சமன் செய்து ஆரோக்கியத்தை தரும் சிறந்த மூலிகை நம்ம ஊரு முருங்கை.

அதிலும் நாட்டு முருங்கை இலையை பொடியாக்கி சூப் செய்வதற்கு ஏதுவாக பொடியாக்கி வைத்துக்கொண்டால் தினமும் ஒரு ஸ்பூன் சுடுநீரில் போட்டு குடித்தால் போதும். நமது ஆரோக்கியதிற்கு வேறு எதுவும் தேவையில்லை. 

அனைத்தும் சரி. ஆனால், இந்த சூப் பொடி சரியாக செய்வது எப்படி? என்று யோசிப்பவர்களுக்கு ஒரு சிறந்த வழி நேட்டிவ்ஸ்பெஷல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare murungai soup podi in tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->