சர்க்கரைவள்ளி கிழங்கை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாதா.?! பெண்களே கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


மற்ற கிழங்குகளுடன் ஒப்பிடும் போது சர்க்கரைவள்ளி கிழங்கில் குறைவான அளவு கொழுப்பு தான் இருக்கிறது. இதில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், நார்ச்சத்து மற்றும் விட்டமின்கள் காணப்படுகின்றன.

பெண்கள் தங்கள் உணவில் அடிக்கடி சர்க்கரைவள்ளி கிழங்கு சேர்த்துக் கொள்வது உடலில் ஆரோக்கிய நன்மைகளை ஏற்படுத்தும். அவர்களது சரும அமைப்பை மேம்படுத்த சர்க்கரைவள்ளி கிழங்கு உதவுகிறது. இதில் அதிகப்படியான விட்டமின் ஏ இருப்பதால் இளமையான பளபளப்பான சருமத்தை பெற இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது.

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இதில் இரும்பு சத்து நிறைந்து காணப்படுகிறது. இது பெண்களுக்கு ஏற்படும் ஞாபகம் வருதே பிரச்சினைகளை தவிர்க்க உதவும். 

கர்ப்ப காலத்தில் மற்றும் பால் கொடுக்கும் போது சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். ஒருமுறை இதை எடுத்துக்கொண்டு எந்த விதமான ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து இதை கட்டாயம் சாப்பிடலாம். ஒரு சிலரின் உடலமைப்புக்கு தான் சர்க்கரை வள்ளி கிழங்கு ஏற்றதாக இருக்காது. 

ஆனால் பொதுவாகவே தாய்மார்களும் கர்ப்பிணி பெண்களும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடக் கூடாது என்று கூறுவது தவறு. குழந்தையின்மை பிரச்சனை மற்றும் கருப்பை பிரச்சனை கொண்டவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை அடிக்கடி சாப்பிடுவது கர்ப்பப்பையை வலிமைப்படுத்தி கருத்தரிப்பதற்கான சூழலை அதிகரிக்கும்.

பொதுவாகவே பெண்கள் மூட் ஸ்விங்ஸ் பிரச்சனைகளுக்கு ஆளாகி மிகுந்த மன அழுத்தத்தை எதிர்கொள்வார்கள். இவர்கள் அந்தப் பிரச்சினைகளை தவிர்க்க சர்க்கரை வள்ளிக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pregnant women and mother should eat sarkarai Valli kizhangu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->