உடனே படிங்க... சமையலுக்கு ரொம்ப முக்கியம்.! - Seithipunal
Seithipunal


என்னதான் நாம் ருசியாக சமைத்தாலும் மேலும் சில உணவுகளை சேர்த்தாலும், குறைத்தாலும் கூடுதல் சுவையை தரும். அதில் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

* குருமா வைக்கும் போது தேங்காய்க்கு மாற்றாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரகரப்பாக அரைத்து கலந்தால் குருமா புதீய சுவையுடன் இருக்கும்.

* மெது வடைக்கு மாவு அரைக்கும் போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

* புளியோதரை தயாரிக்கும் போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த கடலை மாவை சேர்த்துப் பாருங்கள். புளியோதரை சூப்பராக இருக்கும்.

* பெருங்காயம் கட்டியாக போனால், அதில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு வையுங்கள். இளகி விடும்.

* தோசை மாவு புளித்திருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கடுகு தாளித்துப் போட்டு சுவையான ஊத்தப்பம் தயார் செய்யலாம்.

* சப்பாத்தி மாவை சளித்தவுடன் மீதி இருக்கும் கப்பியை வீணாக்காமல் அடை மாவில் கலந்து சுவையான அடை செய்யலாம்.

* பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டால் சிறிதளவு ரவையை வறுத்துக் கலந்தால் கெட்டியாகி விடும்.

* ரசம் சுவையாக இருக்க தாளிக்கும் எண்ணெயில் பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையை போட்டால் ரசம் நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samaiyal tips


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->