கரப்பிணி பெண்களுக்கு செய்யப்படும் வளைகாப்பு விழா பற்றி தெரிஞ்சிக்கலாமா.?
What is special about holding a baby shower for pregnant women
ஒரு பெண்ணின் வாழ்க்கை சக்கரத்தில் பூப்பெய்தல் திருமணம் மற்றும் குழந்தை பேரு இந்த மூன்று நிகழ்வுகளும் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதது. அத்தகைய குழந்தை பேருக்கு முன்பாக பெண்ணிற்கு நடத்தப்படும் முக்கியமான சம்பிரதாயச் சடங்கு வளைகாப்பு என்பதாகும். அத்தகைய சிறப்பு மிக்க வளைகாப்பு பற்றி பார்க்கலாம்.
இந்திய கலாச்சாரம் மரபுப் படி வளைகாப்பு என்பது ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது நடத்தப்படும் முக்கியமான சடங்காகும். அதிலும் குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தில் இந்த சடங்கு இன்றியமையாத ஒன்று. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஐந்தாவது மாதம், ஏழாவது மாதம் அல்லது ஒன்பதாவது மாதம் இந்த மூன்று மாதங்களில் ஏதேனும் ஒரு மாதத்தில் நடத்துவார்கள். பொதுவாக தலை பிரசவத்திற்கு மட்டுமே இது நடத்தப்பட்டாலும் சில இடங்களில் இரண்டாவது குழந்தைக்கும் நடத்துவார்கள்.
வளைகாப்பின் போது கருவுற்றிருக்கும் பெண்ணிற்கு மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வளையல் அணிவித்து, மலர் தூவி வாழ்த்துவார்கள். அதற்கு முன்பாக வேப்பிலையில் காப்பு செய்து அறிவிப்பார்கள் மேலும் மல்லிகை அல்லது முல்லை பூ சூடி விடுவார்கள்.
இந்த வளைகாப்பு நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக ஐந்து அல்லது ஏழு வகையான உணவுகளை கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு ஊட்டி விடுவார்கள். இந்த நிகழ்ச்சியில் அந்தப் பெண்ணின் கணவரும் கலந்து கொள்வார். இது கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் மனதிற்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருவதோடு அனைவரது வாழ்த்துக்களையும் பெற்றுத் தரும் என்பதால் சம்பிரதாயமாக நடத்தப்படுகிறது.
English Summary
What is special about holding a baby shower for pregnant women