சுவையான ஆட்டு ஈரல் வறுவல்..! செய்வது எப்படி..!
aattu eeral special preparation
தேவையான பொருட்கள் :
ஈரல் - அரை கிலோ
பொடி - வெங்காயம் 2
இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தனியாத் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
பட்டை - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
ஈரலை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பட்டை இரண்டு துண்டுகள் போட்டு பொரியவிடவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும். பின்பு ஈரலை போட்டு தொடர்ந்து உப்புத்தூள் மற்றும் எல்லாத்தூள் வகைகளையும் போட்டு நன்கு கிளறி விடவும்.
தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேகவிட வேண்டும். தண்ணீர் முழுவதும் வற்றும் வரை வேகவைத்து நன்கு சுருள கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.
சுவையான ஆட்டீரல் வறுவல் ரெடி.!
English Summary
aattu eeral special preparation