இரவு தூங்குவதற்கு முன் 'ஒரு கிளாஸ் பால்' குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்.! - Seithipunal
Seithipunal


பால் பல ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே உள்ளடக்கியதாகும். இதில் புரோட்டின், நல்ல கொழுப்பு, கால்சியம்,  வைட்டமின்கள் என நம் உடலுக்கு இன்றியமையாத மற்றும் ஆற்றலை தரக்கூடிய சத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது. பால் பொதுவாக காலையில் குடிப்பது நல்லது என்று அறியப்பட்டாலும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன் பால் குடிப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவை என்ன என்று பார்க்கலாம்:

இரவில் உறங்கச் செல்வதற்கு முன் பால் குடித்து விட்டு செல்வதால் உடலானது திடீரென ஏற்படும் கிருமி தொற்றுகளிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

பாலில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் சத்து பொருள்கள் நமது முகத்தை பளபளப்பாக இருக்க உதவுகின்றன. இதன் காரணமாக தினமும் இரவில் உறங்கச் செல்லும் முன் பால் குடிப்பதால்  மறுநாள் காலை எழும்போது முகம் மிகவும் பளபளப்பாக இருக்கும்.

ஆரோக்கியம் தரும் மாட்டு பாலில்  கெட்ட கொழுப்புகளை விட நல்ல கொழுப்புகளை அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் நம் உடலுக்கு தேவையான புரதம் இருக்கிறது இது இதயத்திற்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியதாகும்.

மாட்டு பாலில் இருக்கக்கூடிய கால்சியம்  நம் எலும்புகளின் வளர்ச்சிக்கும்  உறுதிக்கும் நன்மை பயக்கிறது. இரவு உறங்கச் செல்வதற்கு முன் பால் குடித்து விட்டு தூங்குவதால் நல்ல உறக்கம் வரும். இது மன அழுத்தத்தில் இருந்து  நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of drinking milk before going to sleep


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->