தினமும் காலையில் துளசி சாப்பிடுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா.? - Seithipunal
Seithipunal


துளசி என்பது நம் நாட்டில் ஆன்மீக ரீதியாகவும் மருத்துவர் ரீதியாகவும்  முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செடியாகும். இந்தியாவில் பெரும்பான்மையான வீடுகளில் வழிபாட்டிற்காக  பண்டைய காலத்தில் இருந்தே துளசி செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஆன்மீக ரீதியாகவே உணர்த்து வந்தாலும்  அவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளடங்கி இருக்கிறது. இந்த அற்புதமான துளசி செடியை தினமும் சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் நம்ம உடலுக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்.

துளசியில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகின்றன. இதன் காரணமாக ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் அகற்றப்பட்டு இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நமது உடலானது பாதுகாக்கப்படுகிறது.

துளசியில் ஏராளமான ஆன்ட்டி பாக்டீரியல் மூலக்கூறுகள் உள்ளன. இவை நம் தொண்டையில் ஏற்படும் நோய் கிருமி தொற்றிலிருந்து  அவற்றை பாதுகாக்க உதவுகிறது.

தினமும் துளசியை சாப்பிட்டு வர நமது ஞாபக சக்தியை அதிகரிக்கும். துளசி ஒரு சிறந்த மருத்துவ குணமுள்ள மூலிகை ஆகும். இதனை தினமும் காலையில் சாப்பிட்டு வர நம்முடைய மூளை நரம்புகள் துணர்ச்சியாவதோடு மூளையின் ஞாபக செயல் திறனை அதிகரிக்க இது உதவுகிறது.

துளசியை தினமும் சாப்பிட்டு வர நமக்கு ஏற்படும் நரம்பு கோளாறுகள்  சரியாக உதவுகிறது. இவற்றிலிருக்கும் மருத்துவ பயன்களின் காரணமாக  நரம்புகளின் செயல் திறனை அதிகரித்து நரம்புக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of eating Tulsi every morning for our body


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->