பாயில் படுத்து தூங்குவதால் இத்தனை நன்மைகளா?- இது தெரியாம போச்சே.! - Seithipunal
Seithipunal


காலத்திற்கு ஏற்ப மக்களின் வழக்கை முறையும் மாறி வருகிறது. முன்பெல்லாம் கோரைப்பாயில் தரையில் படுத்து தூங்கியவர்கள் தற்போது கட்டில் மெத்தை என்று சொகுசு வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இந்த நிலையில், கோரைப்பாயில் படுத்து தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* பாயில் படுத்து தூங்குவதால், உடல் சூடு தணியும். உடல் சோர்வு, மந்தம், காய்ச்சல் சரியாகும்.

* கர்ப்பிணி பெண்கள் பாயில் உறங்குவதால் இடுப்பு வலி, முதுகு வலி வராது.

* பிறந்த குழந்தையை பாயில் உறங்க வைப்பதால் கழுத்தில் சுலுக்கு பிடிக்காது. குழந்தையின் முதுகெலும்பபை சீர்படுத்த உதவும்.

* இதேபோல், வயதானவர்கள் தரையில் பாய் விரித்து உறங்குவதே நல்லது. காரணம் உடலில் இரத்த ஓட்ட பிரச்சினை இருக்கும். அதனால், பாயில் சமமாக கால் கையை நீட்டி மல்லாக்க படுக்கையில் உடல் எங்கும் இரத்தம் சீராக பாய்ந்து உடலில் உள்ள கொழுப்பை குறையும்.
மேலும், மூட்டு, முதுகு, தசை சம்பந்தமான பிரச்சனைகள் குறையும்.

* தரையில் பாய் விரித்துப் படுப்பதன் மூலம், நம் உடலில் புவியீர்ப்பு விசையானது சீராகப் பரவுகிறது. இது உடலில் உள்ள நாடிகளுக்குச் சக்தியைக் கொடுப்பதுடன், நம் உடலின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

* ஞாபக சக்தியைப் பெருக்கும். உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைத் தந்து நீண்ட நாள்கள் சீரும், சிறப்புமாக வாழ வழிவகுக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of sleeping in mat


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->