டை அடிப்பதால் என்னென்ன பின்விளைவுகள் உண்டாகும்? - Seithipunal
Seithipunal


காலத்திற்கு ஏற்ப இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது தலை முடிக்கு விதவிதமான கலர் டைகளை பயன்படுத்துகின்றனர். இந்த டையை பயன்படுத்துவதால் ஏராளமான நோய்கள் ஏற்படுவதுண்டு. அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* ஹேர் டைகளில் உள்ள `பேராபினைலின் டை அமைன்' என்கிற ரசாயனப் பொருள் சருமத்தில் எரிச்சல், அலர்ஜி போன்ற பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

* இது தோலில் படும் போது அந்த இடம் எரிச்சலடைந்து சிவந்து வீக்கமடைந்து தடித்துப் போவதுண்டு.

* ஹேர் டை உபயோகிப்பவர்கள் தலைமுடிக்குத் தானே டை அடிக்கிறோம். அலர்ஜி ஏற்பட்டாலும் தலையில் இருக்கும் தோலோடு போகட்டும் என்று நினைக்காதீர்கள்.

* இந்த பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கழுத்து, முன்னந்தலை, நெற்றி, காதுகள், கண் இமைகள் உச்சந்தலை உள்ளிட்ட இடங்களுக்கெல்லாம் பரவ ஆரம்பித்துவிடும்.

* சில ஹேர்டை உபயோகித்த அடுத்த ஒரு நிமிட நேரத்திற்குள்ளேயே அதன் பாதிப்பைக் காட்டிவிடும். சிலருக்கு மூச்சுத்திணறல், வாந்தி உள்ளிட்டவை ஏற்படலாம்.

* ஹேர் டை அடித்துவிட்டு அதிக நேரம் தலையை காயவிட கூடாது. தலைமுடியை பலமுறை நன்றாக அலசி கழுவி காயவைக்க வேண்டும். ஏதேனும், பாதிப்பு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

consequences of dye


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->