Bicycle நாடு... மிகப் பழமையான மாநிலக் கொடி உள்ள நாடு எது?
denmark interesting matters
டென்மார்க் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!
டென்மார்க், ஜட்லாண்ட் தீபகற்பம் மற்றும் ஏராளமான தீவுகளை உள்ளடக்கிய ஸ்காண்டிநேவிய நாடு. இதன் தலைநகரம் கோபன்ஹேகன் ஆகும்.
உலகத்தில் மிக மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய நகரத்தின் பட்டியலில் கோபன்கேஹன் நகரம் முதலிடத்தில் உள்ளது.
டென்மார்க் ஸ்வீடனுக்கு தென்மேற்கிலும், நார்வேயின் தென்பகுதியிலும் மற்றும் ஜெர்மனியின் வடக்கு பகுதியிலும் அமைந்துள்ளது.
டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் சுவாரஸ்யமான நாடுகளில் ஒன்றாகும்.
டென்மார்க் நாடு உண்மையில் ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இது 100க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டுள்ளது.
டென்மார்க்கின் மிகப்பெரிய தீவுகள் கிரீன்லாந்து, டிஸ்கோ தீவு மற்றும் தலைநகர் கோபன்ஹேகன் அமைந்துள்ள zeeland தீவு ஆகும்.
டென்மார்க் உலகின் மிகப் பழமையான முடியாட்சிகளில் ஒன்றாகும். இங்கு டேனிஷ் அரச பாரம்பரியம் 958-ல் தொடங்கியது.
டென்மார்க்கில் 7 ஆயிரம் மைல்களுக்கு மேல் கடற்கரை உள்ளது. அது மட்டுமல்லாமல் எல்லா மாநில பள்ளிகளிலும் நீச்சல் பயிற்சி முக்கியமான பாடமாக உள்ளது.
டென்மார்க் பன்றி இறைச்சி உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முன்னிலை வகிக்கும் நாடு.
டென்மார்க் ஒரு Bicycle நாடு என அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் அங்குள்ள பெரும்பாலான மக்கள் சைக்கிள் ஓட்டுகிறார்கள். மேலும் மழை, வெயில், வெப்பம், குளிர் இப்படி எல்லா காலநிலைகளிலும் மக்கள் சைக்கிள் பயன்படுத்துகிறார்கள்.
டென்மார்க்கில் 1999ல் கட்டி முடிக்கப்பட்ட ஓரெசுண்ட் பாலம் இங்கு மிகவும் புகழ்பெற்றது. இந்த பாலம் டென்மார்க் மற்றும் ஸ்வீடனுக்கு இடையே உள்ள ஓரெசுண்ட் ஜலசந்தியை கடந்து செல்கிறது.
டென்மார்க்கின் ஸ்கேகனுக்கு அருகிலுள்ள மணற்குன்றுகள் வடக்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய இடம்பெயரும் மணற்குன்றுகளாக அறியப்படுகின்றன.
டென்மார்க்கில் ஏழு முதல் பதினாறு வயது வரையிலான மாணவர்களுக்கு பள்ளிப்படிப்பு கட்டாயமாகும்.
கோபன்ஹேகனில் உள்ள மிகவும் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றான டிவோலி கார்டன்ஸ் ஒரு பொழுதுபோக்கு பூங்காவாகும்.
டென்மார்க்கில் அமைந்துள்ள வெஸ்டாஸ் தான் உலகின் மிகப்பெரிய காற்றாலைகளை உற்பத்தி செய்யும் இடமாகும்.
1219ஆம் ஆண்டில் டன்னெபிராக் கொடி முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்டது. இன்னும் பயன்பாட்டில் உள்ள மிகப் பழமையான மாநிலக் கொடி இதுவாகும்.
English Summary
denmark interesting matters