சரக்கு அடிக்கும் போது சைடிஷ், கூல்டிரிங்ஸ் சேர்த்து கொள்கிறீர்களா.?! இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.!
do not drink sarakku and cool drinks
பலரும் மதுவுடன் குளிர் பானங்கள் அல்லது எனர்ஜி பானங்கள் சேர்த்து குடிப்பது வழக்கம். அப்படி குடித்தால் மது குடித்ததே தெரியாது. நாம் குறைவாக தன் குடிக்கின்றோம் என்றும் பெரிய அளவுக்கு ஆபத்தில்லை என்று நம்புகின்றோம். ஆனால் இது உண்மை இல்லை. அங்கேயும் ஆபத்து காத்து இருக்கிறது.
மதுவுடன் குளிர்பானங்கள் சேர்த்துக் உட்கொண்டால் குளிர்பானத்தில் உள்ள டாரைன் என்ற வேதிப்பொருளுடன் ஆல்கஹால் வினைப்புரிந்து கடும் விளைவை ஏற்படுத்தும். இதனால் மனித உடலில் நச்சுத் தன்மை அதிகமாகி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்.
மதுவால் உலகில் வருடத்திற்கு 2.8 மில்லியன் உயிர்களை இழக்கிறார்கள். அதிலும் மதுபானங்களுடன் சைடிஸ், கூல்டிரிங்ஸ் சாப்பிடுவார்கள் மிக விரைவில் இறப்பை சந்திக்கின்றனர்.
மதுபானத்துடன் சிப்ஸ் மாதிரியான நொறுக்கு தீணிகளை அதிகமாக உட்கொள்வோம். அப்படி எடுத்துகொண்டால் தேவையற்ற பக்க விளைவுகளை அதிகம் ஏற்படுத்தும் என்கின்றனர் உணவு நிபுணர்கள்.
உலகளவில் மூன்றில் (32.5 %) ஒருவர் மது அருந்துகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. உலக அளவில் மது அருந்துவதால் ஆண்டுக்கு 2.8 மில்லியன் உயிர்களை இழக்கின்றனர். உலகில், 10-ல் ஒருவர் மது பழக்கத்தால் தான் இறக்கின்றனர். அவர்களின் சராசரி வயது 15- 49. இதில் 2.2 சதவீத பெண்களும், 6.8 சதவீத ஆண்களும் மது அருந்துவதால் உயிரிழக்கிறார்கள் என்று அமெரிக்கா நடத்திய ஆய்வில் தகவல் வெளிவந்துள்ளது.
English Summary
do not drink sarakku and cool drinks