மகா கும்பமேளா 2025; திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ள, ஜனாதிபதி திரவுபதி முர்மு..!
President Draupadi Murmu to take holy dip at Triveni Sangam
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு கடந்த 13-ந் தேதி தொடங்கிய எதிர்வரும் 26-ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு நாடு முழுவதும் இந்துக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள் என ஏராளான பிரபலங்களும் கும்பமேளாவில் பங்கேற்று உள்ளனர். அத்துடன், பிரதமர் மோடி நேற்று முன் தினம் கும்பமேளாவில் புனித நீராடினார்.
இதனை தொடர்ந்து, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பிப்.10-ஆம் தேதி புனித நீராட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
![](https://img.seithipunal.com/media/23-ta969.jpg)
திரிவேணி சங்கமத்தில் இன்று மட்டும் சுமார் 48 லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். இதுவரை 40 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி உள்ளனர்.
மவுனி மௌனி அமாவாசை அன்று மட்டும் 08 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 19 நாட்கள் மட்டுமே உள்ளதால், இந்த எண்ணிக்கை 50 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்டுவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
President Draupadi Murmu to take holy dip at Triveni Sangam