கணவன் - மனைவிக்குள் நடக்கும் 'ஸ்லீப் டிவோர்ஸ்' பற்றி தெரியுமா உங்களுக்கு..?!
Do You know About Sleep Divorce Between Husband and Wife
'ஸ்லீப் டிவோர்ஸ்' என்பதை கணவன் - மனைவிக்குள், என்னவென்ற அனுமானமே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த 'ஸ்லீப் டிவோர்ஸ்' தம்பதிகளுக்கு ஏராளமான நன்மைகளையும் வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஸ்லீப் டிவோர்ஸ் :
ஸ்லீப் டிவோர்ஸ் என்பது கணவன் மற்றும் மனைவி இருவரும் தனித் தனியாக வேறு வேறு அறையிலோ அல்லது ஒரே அறையில் தனித் தனி படுக்கையிலோ படுத்து உறங்குவது. ஆனால் இதை கணவன் - மனைவி இருவரும் மனமொத்து செய்ய வேண்டும்.
பொதுவாகவே மன அழுத்தப் பிரச்சினைகளுக்கு நல்ல தூக்கம் தான் பரிந்துரைக்கப்படும். அதன் பிறகே மருந்துகள் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். நல்ல தூக்கம் தான் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.
ஒருவர் சரியாக தூங்கவில்லை என்பது அவர் நடந்து கொள்ளும் விதத்திலேயே தெரிந்து கொள்ளலாம். சாதாரண கேள்விக்கே எரிச்சலாக, கோபமாக பேசுவது, எரிந்து விழுவது என்று அவரது நடத்தை இருக்கும். இதனால் அலுவலகம் மற்றும் குடும்ப உறவில் கூட சிக்கல் எழ வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில் தான் இந்த 'ஸ்லீப் டிவோர்ஸ்' பல்வேறு நன்மைகளை அளிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் இந்த காலத்தில் இருவரின் மன அழுத்தம் மற்றும் சோர்வு ஆகியவற்றை குறைத்து நிம்மதியாக வாழ இந்த 'ஸ்லீப் டிவோர்ஸ்' உதவுகிறது.
அதற்கு கணவன் - மனைவி இருவரும் மனமொத்து பரஸ்பரம் பேசி முடிவெடுக்க வேண்டியது முக்கியம். இப்படிப்பட்ட மனமொத்த 'ஸ்லீப் டிவோர்ஸ்' மூலம் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கப் பெறுவதுடன் உறவும் ஆரோக்கியமாக மனக் கசப்பில்லாமல் இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
English Summary
Do You know About Sleep Divorce Between Husband and Wife