ஒரே வாரத்தில் 5 கிலோ வரை எடை குறையணுமா.. அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..!! - Seithipunal
Seithipunal



இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் அவதிப்படுவது உடல் பருமன் பிரச்சினையால் தான். அதுவும் தற்போது சின்னஞ்சிறு குழந்தைகள் கூட உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. 

இந்த உடல் பருமன் பிரச்சினையை வெறும் வெந்நீர் குடித்தே எப்படி சரி செய்வது என்று இங்கு பார்ப்போம். 

வெந்நீரை எப்போது, எப்படி குடிக்க வேண்டும்?

ஒரு நாளைக்கு 8 டம்ளர் வெந்நீர் வரை குடிக்கலாம். ஆனால் 8 டம்ளரையும் அதற்கான நேரத்தில் குடிக்க வேண்டும். அதன்படி தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 250 மில்லி வெந்நீரும், பிறகு காலை 9 மணிக்கு 250 மில்லியும் அருந்த வேண்டும்.

இதையடுத்து காலை 11.30 மணிக்கு 300 மில்லியும், மதியம் 1.30 மணிக்கு 250 மில்லியும், இதையடுத்து 3.30 மணிக்கு 300 மில்லியும், 5.30 - 6.30 மணிக்குள் 300 மில்லியும், இரவு 7 மணிக்கு 150 மில்லியும், 9 - 10 மணிக்குள் 100 - 150 மில்லி லிட்டர் வெந்நீரும் குடிக்க வேண்டும். 

வெந்நீர் குடிக்கும்போது நமது உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வெந்நீரை மேற்குறிப்பிட்ட படி குடித்து வந்தால் உடல் எடை மின்னல் வேகத்தில் குறையும். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். சருமம் சுத்தமாவதுடன் செரிமானமும் சரியாக நடைபெறும். தொண்டை விறைப்பு குணமாவதோடு மலச்சிக்கல் பிரச்சினையும் நீங்கும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do You Want to Lose 5 Kg in a Week Then Follow This Diet


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->