வாழைப்பூவை சுத்தம் செய்ய கஷ்டமா இருக்கா..? இந்த டிப்ஸை 'ஃபாலோ' பண்ணுங்க..!! - Seithipunal
Seithipunal



வாழைப்பூ என்றாலே இந்தக் காலத்து பெண்கள் பலரும் அலறியடித்து ஓடி விடுவார்கள். காரணம் அதை சுத்தப் படுத்தி ஆய்ந்து வைக்க அதிக நேரம் எடுக்கும். கைகளில் கறை ஏற்படும். ஆனால் அந்த வாழைப்பூவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. ரத்த சோகை மற்றும் நீரிழிவு பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது இந்த வாழைப்பூ. 

கைகளில் கறை படியாமல் வாழைப்பூவை சுத்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம். வாழைப்பூவை சுத்தம் செய்வதற்கு முதலில் உங்கள் கைகளில் உப்பு அல்லது எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போது தான் உங்கள் கைகளில் கறை படியாது. 

பிறகு வாழைப்பூவை ஒவ்வொரு இதழையும் தனித்தனியாக பிரித்து எடுத்து ஒவ்வொரு பூவின் முனையையும் லேசாக தீட்டினால், பூவுக்குள் இருக்கும் நரம்பு வெளிப்படும். சமைக்கும் போது அந்த நரம்பு வேகாது என்பதால் சுத்தப் படுத்தும்போதே அதனை நீக்கி விட வேண்டும். 

மேலும் அதனருகில் ஒரு ரப்பர் போன்ற பகுதியும் இருக்கும். அதனையும் நீக்கி விடுவது நல்லது. அவ்வளவு தான். வாழைப்பூவை சுத்தம் செய்தாயிற்று. அடுத்து இனி வாழைப்பூவை பொடிப் பொடியாக நறுக்கி  கொள்ள வேண்டும். பூவை நறுக்கியவுடன் அதை மோர் கலந்த நீரில் போட்டு போட்டு நன்றாக கழுவ வேண்டும். இப்படி செய்வதால் வாழைப்பூ கறுத்துப் போகாமல், சமைக்கும் வரை பிரெஷாகவே இருக்கும். மேலும் சமைத்த பிறகு அதன் நிறம் வெண்மையாகவே இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Easy and Simple Tips To Clean Banana Flower


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->