சாதத்தை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடலாமா?
eat food again heat
தற்போதைய காலகட்டத்தில் பெண்களும் வேலைக்குச் செல்வதால், தேவைக்கு ஏற்ப உணவுகளை சமைத்து வைத்துவிட்டுச் செல்கின்றனர். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் அந்த உணவை சூடுபடுத்தி சாப்பிடுகின்றனர். அப்படி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனால், உணவுகளின் ஊட்டச் சத்து குறைந்து நச்சுத்தன்மை கூடும்.
இதே நிலைமை தான் அரிசி விஷயத்திலும் உள்ளது. பொதுவாக பச்சை அரிசியில் பாக்டீரியா செல்கள் காணப்படுகின்றன, ஆனால் அதை சமைக்கும் போது பாக்டீரியாக்கள் இல்லாமல் இருக்கின்றன. ஆனால், 24 மணி நேரத்திற்குப் பிறகு அதில் மீண்டும் பாக்டீரியாக்கள் வளரக்கூடும், இதனால் அது விஷமாகிறது.
இந்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது பாக்டீரியாக்கள் அழிந்தாலும் அதன் நச்சுத்தன்மை நீங்காமல் அப்படியே இருக்கும். அதனை சாப்பிடுவதால் வயிறு வலி உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல், சாப்பாட்டில் உள்ள சத்துக்கள் அழிந்து, சரியாக ஜீரணமாகாது. ஒருவருக்கு செரிமானம் பலவீனமாக இருந்தால், அவர் மீண்டும் சூடான சாதத்தை சாப்பிடக்கூடாது. இதுவும் உடலில் கழிவுகள் தேங்கி, மலச்சிக்கல் மற்றும் பிற வயிற்றுப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.