நீங்கள் 'மன அழுத்தத்தால்' பாதிக்கப் பட்டுள்ளீர்களா? அப்போ உங்கள் உணவு முறையில் 'இந்த' மாற்றங்கள் அவசியம்..!! - Seithipunal
Seithipunal



நமது மன நிலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவும் ஒரு ரசாயனம் தான் டோபமைன். இந்த டோபமைன் நமது  மூளையில் தான் உற்பத்தியாகிறது. ஒருவருக்கு டோபமைன் குறைவாக சுரந்தால் தூக்கமின்மை, சோர்வான மனம், எதிலும் ஆர்வமில்லாதவராக இருப்பார்.

எனவே டோபமைன் அதிகமாக சுரந்தாலே மன அழுத்த பிரச்சினையிலிருந்து விடுபடலாம். இதற்கு நமது வாழ்க்கை மற்றும் உணவு முறையில் மாற்றம் தேவை. என்னென்ன உணவுகள் டோபமைன் சுரப்பை அதிகரிக்கும் என்று பார்ப்போம். 

1.  காபின் அதிகமுள்ள காபி, சாக்லேட்கள் மற்றும் டைரோசின் அமினோ அமிலம் நிறைந்துள்ள மீன், இறைச்சி, தானியங்கள், பால், பீன்ஸ், சோயா போன்றவற்றை உன்ன வேண்டும். 

2. மேலும் பாதாம், வால்நட், ஆப்பிள், அவகேடோ, வாழைப்பழம், வெண்ணெய், ஆரஞ்சு, பட்டாணி, எள், பூசணி விதைகள், தக்காளி, மஞ்சள், கோதுமை, தர்பூசணி ஆகியவை டோபமைன் சுரப்புக்கு பெருமளவில் உதவும். 

3. காலை வேளையில் மிதமான சூரிய ஒளியில் ஒரு 20 நிமிடங்கள் தினமும் செலவிட வேண்டும். 

4. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் போது டோபமைன் அதிகமாக சுரக்கும். எனவே உங்களை எதிலாவது ஆர்வமாக ஈடுபடுத்திக் கொண்டே இருக்கலாம். 

5. பிராணா யாமம் உள்ளிட்ட மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் டோபமைன் அளவு அதிகரிக்கும். 

6. தியானம், யோகா, ஏதேனும் உடற்பயிற்சிகள், நடப்பது, புத்தகம் படிப்பது போன்றவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். 

7. எப்போதும் பிறருக்கு நன்றி சொல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் டோபமைன் அதிகளவில் சுரக்கும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Food Habits For Get Rid Of Stress


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->